இந்தியா-இலங்கை ஒருநாள் தொடரில் வெற்றி யாருக்கு?

வியாழன், 17 டிசம்பர் 2009 (17:28 IST)
இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டிசம்பர் 15ஆம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்களில் ‘த்ரில’ வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள 4 போட்டிகளின் முடிவு எப்படி இருக்கும் என எமது ஜோதிடர் கணித்துள்ளார்.

அதன்படி, 18ஆம் தேதி நடக்கும் 2வது போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு காணப்படும். 21ஆம் தேதி பகலிரவு ஆட்டமாக நடக்கும் போட்டியில் இந்திய அணிக்கு சுமாரான வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

இதையடுத்து 24ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதிகளில் நடக்கும் 4வது, 5வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என ஜோதிடர் கணித்துள்ளார். எனவே இந்திய அணி நிச்சயம் ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என நம்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்