இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு?

திங்கள், 7 டிசம்பர் 2009 (13:50 IST)
இலங்கையில் ஜனவரி 26ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மனுத்தாக்கல் வரும் 18ஆம் தேதி துவங்குகிறது. தற்போதைய அதிபராக உள்ள மகிந்தா ராஜபக்சவை எதிர்த்து அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா களத்தில் குதித்துள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு?

பதில்: ஜனவரி 26ஆம் தேதி (செவ்வாய்) ரோகிணி நட்சத்திரத்தில் வருகிறது. அதனை வைத்துப் பார்க்கும் போது தேர்தலுக்கு பின்னர் சிறிலங்காவின் அரசியல் நிலைமை மிகவும் மோசமடையும். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியாத நிலை ஏற்படும்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பவர்களுக்கான சூழல் இல்லை என்ற போதும், 26ஆம் எண் இறுதி நேரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் வல்லமை படைத்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, ஆட்சியில் இருப்பவர்கள் குறுக்கு வழிகளில் (மிகவும் மோசமான வழிகளில்) ஆட்சியைத் தக்க வைக்கவும் முயற்சி எடுப்பார்கள். எனினும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படுவது நிச்சயம்.

இந்தத் தேர்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படுமா?

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்கக் கூடிய அரசின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும். குறிப்பாக மே மாதத்திற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் எழுச்சியும் துவங்கும். அப்போது குரு மீனத்திற்கு வருவதே இதற்கு காரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்