கர்நாடகா, ஆந்திரா வெள்ளப் பெருக்கின் தாக்கம் இவ்வளவு பயங்கரமாக இருக்கும் என ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா?

விரோதி ஆண்டுக்கான பலன்களில் பரவம் மாறி மழை பொழியும் என்றும், மழை பெய்தாலும் அது விவசாயத்திற்கு பயன்படாமல் போகும் என்றும் கூறியிருந்தீர்கள். கடந்த வாரம் கர்நாடகா, ஆந்திராவில் இந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. மாநிலங்களின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மழையின் தாக்கம் இவ்வளவு பயங்கரமாக இருக்கும் என ஏற்கனவே உணர்ந்திருந்தீர்களா?

ஒரே மாதத்தில் (புரட்டாசி) 2 அமாவாசைகள் வருவது அல்லது ஒரே ஆண்டில் 3 பெரிய கிரகங்கள் பெயர்ச்சியடைவது போன்றவற்றால் இதுபோன்ற அழிவுகள் (வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம்) ஏற்படும்.

இதனால் உலகம் முழுவதும் திடீர் இயற்கை சீற்றங்கள், பேரிடர் ஏற்படும். எனவே இதைப் பற்றி ஏற்கனவே நாங்கள் அறிந்திருந்ததால், அதன் தாக்கம் இப்படி இருக்கும் என்பதை ஓரளவு உணர்ந்துள்ளோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்