செவ்வாய் தோஷம் பற்றி விளக்கியிருந்தீர்கள்? உதயச் செவ்வாய் என்றால் என்ன?

வாசகர் கேள்வி: முந்தைய கட்டுரைகளில் செவ்வாய் தோஷத்தைப் பற்றி விளக்கமாகக் கூறியிருந்தீர்கள். உதயச் செவ்வாய் என்றால் என்னவென்ற விளக்கிக் கூறுங்களேன்?

பதில்: ஜோதிடத்தில் ராஜகிரகங்கள் என்றழைக்கபடும் குரு, சனி ஆகியவற்றுடன் சுக்கிரனுக்கு மட்டுமே உதயம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பண்டைய நூல்களில் கூட உதயம் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பஞ்சாங்கத்தில் குரு பகவான் மேற்கே அஸ்தமனமாகி, கிழக்கே உதயமாகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் சுக்கிரன் மறைந்து, உதயமாவதும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. வெள்ளி (சுக்கிரன்) அஸ்தமானமாகும் போது மழை குறையும், உதயமாகும் போது மழை பொழியும்.

மேலும் சுக்கிரன் எந்தத் திசையில் உதயமாகிறதோ அந்த திசையில் உள்ள மாவட்டங்கள், மாநிலங்களில் அதிகளவு மழை பெய்யும்.

ஆனால் செவ்வாய் உதயம் என்றும் எதிலும் குறிப்பிடப்படவில்லை. செவ்வாயைப் பொறுத்த வரை வக்கிரச் செவ்வாய், நீச்ச செவ்வாய் என்றுதான் கூறப்படுகிறது. செவ்வாய் மறைந்து தோன்றுவது இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்