மக்களவை முதற்கட்ட தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

வெள்ளி, 17 ஏப்ரல் 2009 (12:48 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஒருபுறமும், இடதுசாரிகள் மற்றொரு தரப்பிலும் போட்டியிடுகின்றனர். இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடக்கும் தேதியை வைத்துப் பார்க்கும் போது இடதுசாரிகளுக்கு பின்னடைவு ஏற்படும். காங்கிரஸ் கட்சி புதிய இடங்களை கைப்பற்றும். அதிகபட்சமாக 8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ஆந்திராவில் தொங்கு சட்டசபை: முதற்கட்ட தேர்தல் தேதியை வைத்துப் பார்க்கும் போது ஆந்திராவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்புள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைப்பதற்கும் நூலிழை சாத்தியங்கள் உள்ளன.

இங்கு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கூறலாம். கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 50% குறைவான இடங்களையே காங்கிரஸ் கைப்பற்றும்.

உத்தரப்பிரதேசத்தில் யாருக்கு வெற்றி: இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சிக்கும் குறிப்பிடத்தக்க வெற்றியை எதிர்பார்க்க முடியாது.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானியின் கிரக அமைப்பைப் பார்க்கும் போது உ.பி. மேற்குப் பகுதியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அக்கட்சி பெறும் வாய்ப்பு காணப்படுகிறது.

மே 1ஆம் தேதிக்கு பின்னர் நடக்கும் அடுத்தடுத்த கட்ட தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலை காணப்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பீகாரில் பா.ஜ.க.வுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைப்பதற்கான கிரக அமைப்பு காணப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்