மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் எப்படிப்பட்ட அரசு அமையும்?

வெள்ளி, 17 ஏப்ரல் 2009 (12:45 IST)
இந்தியாவின் ஜாதகத்தைப் பொறுத்த வரை குரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். இந்தியாவின் ராசி கடகம். தற்போது அந்த ராசிக்கு பாதச் சனி நடந்து வருவதால் அக்டோபர் 28ஆம் தேதி வரை சிறப்பான நிலை காணப்படவில்லை.

அதன் பின்னர் செவ்வாய் நீச்சமாகி கடகத்தில் அமர்கிறார். இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி நிலை தொடரும். இதன் காரணமாக “மியூசிக்கல் சேர” போல் ஒரு தரப்பினர் சிறிது காலமும், மற்றொரு தரப்பினர் சிறிது காலமும் மத்தியில் ஆட்சி செய்யும் நிலை ஏற்படும்.

கடகத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பானது அல்ல. வரும் அக்டோபர் 7ஆம் தேதி செவ்வாய் நீச்சம் பெறுவதால், அரசியல் சூதாட்டங்கள், கட்சிகள் கூட்டணித் தாவல், ஒரு கூட்டணிக்கு உள்ளேயே பிளவு ஏற்படுவது, மீண்டும் தேர்தல், போர் காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அக்டோபர் 28க்கு முன்பாகவே ராகு/கேது பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி ஆகியவை நிறைவடைந்தாலும், செவ்வாய் நீச்சம் பெறுவதால், 2010 மே வரை குழப்பமான சூழ்நிலையே நிலவும்.

கம்யூனிஸ்ட்களுக்கு உரிய கிரகமான செவ்வாய் நீச்சம் பெறுவதால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை சரிவடையும்; பாதிப்புகள் உண்டாகும். கட்சிக்குள் பிளவு/பின்னடைவு ஏற்படலாம். மக்கள் மத்தியிலும் அக்கட்சிக்கு மரியாதை குறையவும் வாய்ப்புள்ளது.

தற்போது செவ்வாய் நீர் ராசியான மீனத்தில் அமர்ந்துள்ளதன் காரணமாக கேரள மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட்களுக்கு பின்னடைவு ஏற்படலாம். இதேபோல் மேற்குவங்கத்திலும் நிகழ வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்