மக்களவைத் தேர்தலுக்கு பின் பொருளாதாரம் முன்னேறுமா?

வியாழன், 2 ஏப்ரல் 2009 (16:54 IST)
தனக்காரகன் குரு பகவான். ஒரு நாட்டின் பண இருப்புக்கும் இவரே காரணமாகிறார். தற்போது அவர் நீச்சமாகி சனி வீட்டில் சரணாகதியாகி உள்ளார். 2009-2010 காலகட்டம் வரை அவர் அதே நிலையில் நீடிப்பார்.

குறிப்பாக 2009 இறுதியில் (டிசம்பர் 18க்குப் பின்) கும்பத்திற்கு இடம்பெயர்கிறார். இதனால் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். உலகளவில் மாற்றம் ஏற்பட்டாலும், தேக்கநிலை 2010 வரை நீடிக்கும். இதன் பின்னர் 2011 முதல் சகஜமான சூழ்நிலை, அதிரடி முன்னேற்றம் ஏற்படுவதால் பொருளாதார மந்த நிலை மாறும்.

இந்தியாவின் தற்போதைய கிரக அமைப்பு மோசமாக உள்ளதால்தான் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. ஏழரைச் சனி நடப்பதாலும் (இந்தியாவுக்கு), ஜென்ம ராசியில் கேது அமர்ந்துள்ளதாலும் இந்தியா மோசமான காலத்தை சந்தித்து வருகிறது.

தேர்தலுக்குப் பின்னர் பொருளாதார ரீதியாக மந்த நிலை அதிகரிக்கும். அரசியலில் நிலையற்ற தன்மை உள்ளிட்டவற்றால் அதிகமான குழப்பங்களை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்