ஒரிஸா, சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

புதன், 1 ஏப்ரல் 2009 (18:19 IST)
ஒரிஸாவில் ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்லில் நடக்கிறது. அன்றைய தினம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக காணப்படுகிறது. அதே தருணம் அங்கு பா.ஜ.க.வுக்கு சரியான கூட்டணி அமையாத காரணத்தால், தற்போது அம்மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பா.ஜ.க. கைப்பற்றும்.

சட்டீஸ்கர்: இந்த மாநிலத்தில் 11 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ்-பா.ஜ.க நேரடியாக மோதுகின்றன. அங்கு பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

உத்தரப்பிரதேசம்: நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்த வரை, அதிகம் பலவீனமடையும் கட்சி காங்கிரஸாக இருக்கும்.

இதற்கு அடுத்தபடியாக பா.ஜ.க.வுக்கு பாதிப்பு ஏற்படும். எனினும் காங்கிரஸ் பெறும் தொகுதிகளை விட பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

இதேபோல் தற்போதைய முதல்வர் மாயாவதிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். ஆனால் முலாயம் சிங் அவரை விட அதிக இடங்களைப் பெற்று முன்னிலை பெறுவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்