தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் பலவீனமடையும்

திங்கள், 30 மார்ச் 2009 (13:53 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளை இழந்துள்ளதன் காரணம் என்ன?

பதில்: ஜோதிட ரீதியாகப் பார்த்தால், அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் மிதுன ராசி. அவர்களுக்கு குரு 8இல் மறைந்து இருக்கிறார். குரு மறைந்து இருந்தால் எல்லாவற்றிலும் சிக்கலைக் கொடுக்கும். ஆனால் மே 1ஆம் தேதி குரு 9ஆம் இடத்திற்கு வருகிறார்.

ஆனாலும் ராகு கேதுவின் இடங்கள் மிக மோசமாக உள்ளது. அது படுமோசமான தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. ராசிக்கு 8இல் ராகுவும், 2இல் கேதுவும் உள்ளது. அதனால் இப்படி பிரச்சினைகள் வருகின்றன.

மேலும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த ராகுவும், கேதுவும் இன்னும் மோசமடைகின்றது. இதை வைத்துப் பார்க்கும் போது, காங்கிரஸ் கட்சி மேலும் தனது வலிமையை இழக்கும் நிலைதான் உள்ளது.

மக்களவைத் தேர்தலும் பூராடத்தில் ஆரம்பித்து பூராடத்தில் முடிகிறது. அதுவும் சரியில்லை. அதனால் காங்கிரசைப் பொறுத்தவரை -ஆள்பவர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதுதான் சிம்மச் சனியின் வேலை - அந்த மாதிரியான நிலைதான் ஏற்படும்.

என்னதான் திறமையாக வேலை செய்தாலும் அதில் ஒரு முழுமையை காண முடியாத நிலையை சிம்மச்சனி ஏற்படுத்திவிடும். அதனால் காங்கிரசிற்கு இந்த தேர்தல் ஒரு அடியாகத்தான் முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்