முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா எதிரியல்ல என ஒபாமா கூறியிருப்பது பற்றி?

சனி, 31 ஜனவரி 2009 (16:01 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள பராக் ஹுசைன் ஒபாமா சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா எதிரியல்ல எனக் கூறியுள்ளார்.

ஒபாமா அப்படிக் கூறியுள்ளது நட்புறவை உண்மையாகவே வளர்த்துக் கொள்ளவா? அல்லது வெறும் பசப்பு வார்த்தைகளா?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை முகமதிய கிரகங்கள் என்று கூறப்படுவது சனியும், ராகுவும்தான். சனியின் எண் 8. ஒபாமா பதவியேற்றது அமெரிக்காவின் 44வது (4+4=8) அதிபராக என்பதால் அனைத்து வகையிலும் சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அவருக்கு உள்ளது.

அந்த வகையில் பார்த்தால் ஒபாமாவின் கருத்து மனம் திறந்தது. அதில் நிறைய உண்மைகள் பொதிந்துள்ளது. ஆனால் அவர் மீண்டும் அதிபராக (ஜனவரி 21ஆம் தேதி) பொறுப்பேற்ற போது இருந்த கிரக நிலைகளை வைத்துப் பார்க்கும் போது அவரது கூற்றில் இரட்டை நிலை காணப்படுகிறது.

எட்டாம் எண்ணுக்கு உரிய சனி, பயங்கரவாதத்தை ஒழிக்கும் குணம் பெற்றது. ஆனால் அதே சனிதான் மனிதாபிமானத்திற்கு உரிய கிரகமும் கூட. எனவே, இவர் அடுத்தப்படியாக கூறப் போகும் விடயங்கள் எப்படி இருக்கும் என்றால்...

நாங்கள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அதே வேளையில் முஸ்லிம் நாடுகளில் இருந்து பயங்கரவாதத்தை தூண்டுபவர்கள் அவர்களுக்கு துணை செல்பவர்கள் எங்களுக்கு எதிரிகள். எனவே, எதிரிகளை இனம் கொண்டு ஒதுக்கிவிட்டால் அமெரிக்கா அவர்களை மட்டும் ஒழிக்கும் என எச்சரிக்க விடுப்பார்.

பொதுவாக 8ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்கு வருபவர்கள், முதலில் ஒரு விடயத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, அதன் பின்னர் தங்களின் செயல்பாட்டை சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்வதுடன் தங்களின் குறிக்கோள் என்ன என்பதையும் வெளிப்படுத்தில் இறுதியில் வெற்றி ஈட்டுவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்