இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளின் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வியுடன் எமது ஜோதிடரை அணுகினோம்.
2வது ஒருநாள்: ஜனவரி 31ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவுக்கு சாதகமாக நிலை உள்ளது.
3வது ஒருநாள்: பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் 12 மணி வரை இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. அதன் பின் இலங்கைக்கு சிறப்பான சூழல். (இப்போட்டி பகல்/இரவு ஆட்டமாக நடப்பது குறிப்பிடத்தக்கது).
4வது ஒருநாள்: பிப்ரவரி 5இல் நடக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
5வது ஒருநாள்: பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளுமே வெற்றிக்காக போராட வேண்டியிருக்கும்.
இருபது-20ல் வெற்றி பிரகாசம்: பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் இருபது-20 போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு எந்தத் தடையுமில்லை.