சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப்படைக்கிறது என ஏற்கனவே கூறியிருந்தோம். இதனை கடந்த சில மாதங்களில் நிதர்சனமாகவே உணர்ந்தோம். வரும் செப்டம்பர் 27ஆம் தேதிக்குப் பின்னரே கன்னிக்கு சனி பெயர்கிறது.
எனினும், வரும் மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களில் சிம்மச்சனியை குரு பார்ப்பார். இதன் காரணமாக சிம்மச் சனியின் தாக்கம் சற்றே குறையும். அதே நேரத்தில் சனி வீட்டில் குரு உட்கார்ந்துள்ளதால், பெரிய அளவில் மாற்றத்தை, ஏற்றத்தை உருவாக்கிட முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பரவாயில்லை என்ற நிலை ஏற்படும்.
எனவே, சனி கன்னி ராசிக்கு பெயர்ந்தால்தான் ஏற்றத்தை எதிர்பார்க்க முடியும். இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் மந்த நிலையே காணப்படும். ஒவ்வொரு நாளிலும் அந்தந்த கிரக நிலைக்கு ஏற்ப ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுமே தவிர சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாது.
வரும் 29ஆம் தேதி (மற்றொரு பஞ்சாங்கப்படி 27ஆம் தேதி) சுக்கிரன் மீனத்திற்கு வந்து உச்சம் பெறுகிறார். இதனால் பங்குச்சந்தையில் ஓரளவு ஏற்றம் ஏற்படலாம்.