பயங்கரவாத சம்பவங்களை முன்கூட்டியே துல்லியமாக கூற முடியுமா?
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:25 IST)
சனிப்பெயர்ச்சியால் மராட்டியம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை சனிப் பெயர்ச்சியின் போதே குறிப்பாக கூறியிருந்தோம். சிம்மம் மராட்டியத்தின் ராசி என்பதால் மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்ற கொடுஞ்செயல்கள் நிகழ்ந்துள்ளன. மும்பை அடுத்தடுத்து பாதிக்கப்படும் நிலையே அடுத்த சில மாதங்களின் ஜாதக நிலை காணப்படுகிறது.
ஏப்ரல் வரையிலும் கடும் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படலாம்.
சனி தற்போது உள்ள (சிம்மம்) இடத்திலேயே அடுத்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி வரை தொடர்வார். இது இந்தியாவை பலவீனப்படுத்தும். அதன் பொருளாதாரத்தை சீர்குலையச் செய்யும்.
இந்தியாவின் வர்த்தகத்திற்கு முதுகெலும்பு என்று மராட்டியத்தை குறிப்பிடலாம். பங்குச்சந்தைகள் முதல் பாலிவுட் வரை அங்குதான் மையம் கொண்டுள்ளது. எனவேதான் அங்கு தாக்குதல்கள் நடந்துள்ளது.