பீஜிங் ஒலிம்பிக்கிற்கு பின்னர் சீனாவின் வளர்ச்சி எப்படி இருக்கும்?
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சீன அரசு அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்தி முடித்துள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கு பின்னர் சீனாவின் முன்னேற்றம், பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லுமா? அல்லது ஒலிம்பிக் நடத்துவதற்கு முன்பு இருந்தது போலவே இருக்குமா?
பதில்: ஒலிம்பிக் நடத்தியதால் பெரியளவில் சீனா வளர்ச்சியடைந்து விடும் எனக் கூற முடியாது.
webdunia photo
WD
இத்தனை செலவு செய்து, உலகமே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமாக ஒலிம்பிக்கை நடத்தியதற்கு சீனா எங்கேயோ சென்றிருந்த வேண்டும் என உலக மக்கள் சிந்தித்தாலும், சிம்மத்தில் சனி இருப்பதால் சீனாவின் வளர்ச்சி மந்த கதியில் தான் இருக்கும்.
ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்தியதன் மூலம் உலக அரங்கில் தங்களைப் பற்றிய ஒரு பிரம்மிப்பை வேண்டுமென்றால் சீனா உருவாக்கி இருக்கலாம். ஆனால் இதனால் சீனாவுக்கு எந்த ஒரு பயனும் இருக்காது.