திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போது கோயிலிற்குள் சென்று இறைவனை தரிசிக்காமலே வரலாமா?

புதன், 20 ஆகஸ்ட் 2008 (15:02 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

கிரிவலம் வந்துவிட்டு இறைவனை தரிசிக்காமலேயே வந்தாலும் முழுப் பலன் கிடைக்கும். சிவஞானம் போகம் போன்ற நூல்களில், திருவண்ணாமலை கிரிவலம் போய் வந்தவர்களை நாம மூன்று தடவை சுற்றினாலே போதும், கிரிவலம் வந்ததற்கான பலன் நமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சிவனை விட சிவனடியார்களை வணங்கினாலே போதும் என்பது போல் திருவண்ணாமலையில் மூலவரைக் காட்டிலும் வெளியில் இருக்கும் மலை வடிவமாக எழுந்தருளியிருக்கிறார் அல்லவா அதற்கு சக்தி அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். எனவே இறைவனை எதிர்கொண்டு வணங்குதல், வழிகொண்டு வணங்குதல், திசை நோக்கி வணங்குதல் போன்றவை சங்க காலத்திலேயே உள்ளது.

அந்த காலத்திலேயே எல்லோரும் கோயிலுக்குச் சென்றுதான் வணங்கினார்கள் என்று இல்லை. கோயில் எந்த திக்கில் இருக்கிறதோ அந்த திக்கை நோக்கி வணங்கி வழிபடும் முறைகளும் இருந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்