ஆன்மீகத்தில், நடைமுறையில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு மனிதன் அவனுக்கென்று உள்ள காலகட்டம். ஆயுள் முடிவதற்குள் ஏதாவது காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டால், காலம் முடியும் வரை ஆவியா சுற்றிக் கொண்டு இருப்பானா?
முனைவர் க.ப. வித்யாதரன்:
இதுதான் மறுஜென்மம் உண்டான்னு விஜய் டி.வி. நீயா நானால போன வாரத்திற்கு முந்தைய வாரம் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தோம்.
ஜாதகத்திலேயே ஆயுள் ஸ்தானம் என்று இருக்கிறது. எந்த ஜாதகத்திலும் எப்ப மரணம்னு சொல்லப்பட்டிருக்கு. சில ஜாதகத்தில் துர் மரணம் என்றே சொல்லப்பட்டிருக்கும். அதனால அந்த வயசு வரைக்கும் அவங்க ஆவி சுற்றிக் கொண்டிருக்கும் என்பதெல்லாம் கிடையாது. 65 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தா 65 தான், 45ல் எல்லாம் ஒன்றும் ஆகாது. மீதி 20 வருடம் அவங்க அங்கேயே இருந்து கொண்டிருப்பார்கள், சுற்றிக் கொண்டிருப்பார்கள், அவங்கள கடவுள் கூப்பிட்டுக்கொள்ள மாட்டாரு, பாவத்தையெல்லாம் சுற்றிவிட்டு வா என்று அனுப்பிவிடுவாரு என்று சொல்வதெல்லாம் ஒன்றும் கிடையாது.
ஒரு மரணம் நிகழ்கிறது. அப்ப உடலை விட்டு உயிர் பிரியும். அப்படி பிரியும் போது அது இன்னொரு இடத்தில் போய் மீண்டும் உருவெடுக்கிறது. இது சில ஆத்மாக்களுக்கு உடனடியாக வாய்ப்பு தரப்படுவதில்லை. சில காலம் கழித்துதான் அந்த வாய்ப்பு தரப்படுகிறது. உதாரணமா, ஒரு விதை விதைக்கிறீர்கள், அந்த விதை உடனே முளைப்பதில்லை. அதற்குத் தகுந்த ஈரப்பதம், ஒளி இவையெல்லாம் கிடைத்த பிறகுதான் அது வந்து உருவெடுக்கிறது, முளைக்கிறது. அதே மாதிரிதான் இதுவும், அதற்கான சூழல் வரும் வரைக்கும் காத்திருக்கும். ஆனா சுற்றிக் கொண்டிருக்கும் அது மாதிரியெல்லாம் ஒன்றும் கிடையாது.
அப்படியென்றால் சுற்றுவதெல்லாம் என்று ஒன்றும் இல்லையா?
அடுத்ததா நீங்க எங்க போறீங்கன்னு தெரியுது. அப்ப இந்த பேய், பிசாசுன்னு வந்து போறதெல்லாம் என்ன அப்படீன்னு நீங்க கேட்கிறீர்கள்.
நீங்க சொல்வது மாதிரி சுற்றுவதெல்லாம் உண்டு. நான் சொன்ன மாதிரி ஒரு விதை தகுந்த சூழல் வந்தாதான் முளைக்கும். அதுவரைக்கும் அந்த விதை அங்கேயேதான் கிடக்கும். அதற்காக அந்த விதை பயனற்றுப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. அதுபோலத்தான் ஆத்மாவும், அதற்கு ஒரு பவர் உண்டு, அதற்கான சூழல், அதனுடைய கர்மா இருக்கு, அதற்குத் தகுந்த தொடர்ச்சி, அதற்குத் தகுந்த உடம்பு அமைய வரைக்கும் அது காத்துக் கொண்டு இருக்கும். இதை பயன்படுத்தி சிலது சுற்றுவது உண்டு.