டாடா சுமோ வாகனம் அதிகமான விபத்துகளை சந்திக்க காரணம்?

வெள்ளி, 30 மே 2008 (16:39 IST)
பொதுவாக வாகனங்களுக்கு தனித்தனியாக கிரகங்களை பிரித்து வைத்திருக்கிறோம்.

டாடா சுமோவை எடுத்துக் கொண்டால் சனி + ராகுவின் கலப்பில் வரும். குவாலிஸ் புதனின் கட்டுப்பாட்டில் வரும். மாருதி செவ்வாயின் கீழ் வரும்.

ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு ராசியின் கட்டுப்பாட்டில் வரும். இன்ன தசா புக்திக்கு என்ன வாகனம் எடுக்கலாம் என்று சொல்லலாம்.

சிலருக்கு கார் விருப்பம் அதிகமாக இருக்கும். கார் வாங்குவார்கள். இரண்டு வருடம் பயன்படுத்திவிட்டு விற்றுவிடுவார்கள். மற்றொரு கார் வாங்குவார்கள். அப்போ இன்னன்ன தசா புக்திக்கு இந்த கார் வாங்குங்கள்.

நேற்று ஒருவர் வந்திருந்தார். என்ன வாகனம் வாங்குவது என்று கேட்டு. அவருக்கு சுக்கிர திசையில் புதன் புக்தி நடக்கிறது. பெட்ரோல் வண்டி எடுக்கலாமா, டீசல் வண்டி வாங்கலாமா என்று கேட்டிருந்தார். அவருக்கு பெட்ரோல் வண்டி வாங்கலாம் என்று கூறியிருந்தோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்