திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது தேவையானதா?

வெள்ளி, 30 மே 2008 (16:38 IST)
தங்களது பிள்ளைகளின் குண நலம் எப்படி என்று பெற்றோருக்குத் தெரியும். குழந்தைக்கு தீட்டு கழிப்பது, அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்ப்பது என் எல்லாவற்றையும் ஜாதகம் பார்த்துத்தான் செய்கிறோம்.

திடீரென திருமணத்திற்கு மட்டும் பார்ப்பதில்லை.

இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் ஜாதகம் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. குழந்தையை சிசேரியன் செய்வதற்கும் நல்ல நாள் பார்க்கும் அளவிற்கு போய்விட்டோம்.

எனவே எல்லாவற்றிற்கும் ஜாதகத்தைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு திருமணம் என்று வரும்போது இந்த கவலை அதிகரிக்கிறது.

எனவே தனது பிள்ளையின் குண நலனுக்கு ஏற்ற துணையை அமைத்துத் தரும் பொறுப்பினை சரியாக செய்ய ஜோதிடத்தை அணுகுகின்றனர்.

அதாவது ஒரு சிலருக்கு அதிகமாகக் கோபம் வரும். அதுபோன்ற பெண்ணின் ஜாதகத்தை பெற்றோர்கள் கொடுக்கும்போது அந்த பெண்ணிற்கு அடுத்தடுத்து வரும் தசா புக்திகளை பார்த்து, அதே தசா புக்தி நடக்கும் ஆணுடன் சேர்த்து வைத்தால் நன்றாக இருப்பார்கள்.

எனவே பொருத்தம் பார்த்து வைக்கும் எத்தனையோ ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான ஒற்றுமையான ஜோடிகளை எங்களால் உருவாக்க முடியும்.

எனவே தான் ஜோதிடத்தைப் பார்ப்பது அவசியமாகிறது.

திருமணத்திற்கு பெற்றவர்களின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டுமா?

பார்க்க வேண்டாம். திருமணத்திற்கு மணமக்களின் ஜோதிடத்தை மட்டும் பார்க்க வேண்டும்.

ஒரு பெண் தனது மாமியாராக வரப்போகிறவரின் ஜாதகத்தை கொண்டு வந்து கொடுத்து அவருடன் ஒத்துப்போகுமா என்று கேட்டார்... இதைப் பார்த்தால் தற்போதைய சமுதாயம் ரொம்ப வேகமாகப் போகிறது.

இவர்கள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை. பிரச்சினையை விட்டு ஓடவே நினைக்கின்றார்கள்.

பிரச்சினையை சமாளிக்கவோ, பிரச்சினையை அதனுடன் சென்று சரி செய்யவோ இவர்களுக்கு துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதில் இருந்து தப்பிக்கத்தான் நினைக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்