கர்நாடகத்தில் திருமணத்திற்கு சென்ற உறவினர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 40 பேர் பலியானது?

வெள்ளி, 30 மே 2008 (16:37 IST)
இந்த விபத்து நேற்று மதியத்திற்கு மேல் நடந்துள்ளது. நேற்று உத்திரட்டாதி நட்சத்திரம். மேலும் அன்று சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம். ஒன்று, மணமகனோ, மகளோ சிம்ம ராசியாக இருக்க வாய்ப்பு உண்டு. யாருடைய நிகழ்வுக்காக அவர்கள் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

மணமக்களுக்கு சந்திராஷ்டமமாகவோ, ஜென்ம நட்சத்திரமாகவோ இருக்கலாம். மணமக்களுக்காகத்தானே இவர்கள் போகிறார்கள். அவர்களுக்கு நடக்க வேண்டியது, இவர்களுக்கு நடக்கலாம்.

அந்த லாரியில் 4 ஏழரை சனி, 10 அஷ்டமத்து சனி ஏறியிருந்தால் நிச்சயம் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும்.

நடிகை ரோகிணி நடத்தும் கேள்விகள் ஆயிரம் நிகழ்ச்சியில், தர்மபுரி பேருந்து எரிப்பு, ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் தீ விபத்தில் 90 பேர் மரணம், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் மரணம் எல்லாம் பார்த்தால் மரணத்தைத் தரக்கூடிய தசாபுக்திகள் அவர்களுக்கு இருந்தது தெரிய வந்தது.

மரணத்திற்கான கிரகச் சாரம் இருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்வார்கள். தசாபுக்தி கொஞ்சம் வலுவாக இருப்பவர்கள் இதில் உயிர் பிழைத்துக் கொள்வார்கள். அதாவது பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைவார்கள். தசாபுக்தி சரியில்லாதவர்கள் உயிரிழப்பார்கள்.

பொதுவாக கும்பலாக போவதை இந்த காரணத்திற்காக தவிர்க்கலாம் என்று சொல்லலாமா?

காஞ்சிபுரத்தில் எனக்கு தெரிந்தவர் ஒருவர் இருந்தார். இந்த சம்பவம் 6, 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவரது குடும்பத்திற்கு சனி தசை நடந்து கொண்டிருந்தது. பெண்ணிற்கு ஏழரை சனி, பையனுக்கு அஷ்டமத்து சனி, இன்னொரு பெண்ணிற்கு சனி தசை, கணவன் - மனைவி இருவருக்குமே ஏழரை சனி நடந்து கொண்டிருந்தது.

அவர்களிடம்..

குடும்பத்தோடு வண்டி எடுத்துக் கொண்டு எங்கேயும் போகாதீர்கள் என்று சொன்னேன். அவ்வாறு போவதாக இருந்தால் ரயிலிலோ, பேருந்திலோ செல்லுங்கள். எல்லோரும் ஒன்றாகப் போகாதீர்கள் என்று சொல்லியிருந்தேன்.

webdunia photoWD
அப்படி இருந்தும் அவர்கள் காஞ்புரத்தில் இருந்து திருவள்ளுர் செல்வதற்காக வாகனத்தில் புறப்பட்டார்கள். எல்லோரும் ஒன்றாக செல்ல வேண்டாம் என்று சொன்னதற்காக அவர் மட்டும் தனியாக ஒரு வாகனத்தில் ஏறிக் கொண்டு குடும்பத்தாரை ஒரு வாகனத்தில் அனுப்பிவிட்டார்.

பாதி தூரம்தான் சென்றிருக்கும். அவரது குடும்பத்தார் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி அவரது பெண்ணைத் தவிர அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். தற்போது அந்த பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் உள்ளன. பலருக்கும் நாம் முன்னெச்சரிக்கை கொடுக்கிறோம். இதுபோன்று சில தசாபுக்திகள் நடக்கும்போது குடும்பத்தோடு போகாதீர்கள். தனித்தனியாக போங்கள். இன்று இரண்டு பேர் போகட்டும். நாளை 2 பேர் கிளம்பி போங்கள். இல்லையென்றால் ரயிலில் செல்லுங்கள் என்று கூறுகிறோம்.