சனி சிம்ம ராசியில் இருந்தாலே பசி, பட்டினி, பஞ்சம், உணவு தட்டுப்பாடு இதெல்லாம் ஏற்படும். ஆனால் சனி தற்போது குருவின் பார்வையில் இருக்கிறார். அதனால் சனி தலை விரித்து ஆடவில்லை. ஆடாமல் உள்ளுக்குள் உணவு உற்பத்தி குறைதல், ஒரு பகுதியில் அதிகமாக விளைந்து, அதனால் விலை கிடைக்காமல் அழிகப்படுதல்,வீணடிக்கப்படுதல் போன்றவற்றைக் கொடுக்கும்.
டிசம்பர் 6ஆம் தேதியில் இருந்து குருவின் பார்வை சிம்மத்திற்கு கிடைக்கப் போவதில்லை. அதற்குப் பிறகு இன்னமும் மோசமாக இருக்கும். உணவுத் தட்டுப்பாடு அதிகரிக்கும்.