நடைமுறையில் சனி - செவ்வாய் சேர்க்கை நடக்கும்போதெல்லாம் இதுபோன்ற கலவரங்கள் ஏற்படுகின்றன. ஆண்டுப் பலன் கணிக்கும்போதே அது போன்ற நாட்களில் கலவரங்கள் நடக்கும் என்று குறிப்பிடுகின்றோம். தீ விபத்து போன்றவையும் நடக்கும் என்று சொல்கிறோம்.
ஜுன் 22ஆம் தேதியிலும் செவ்வாயும், சனியும் ஒன்று சேர்கின்றது. இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். அதுவரை மோசமான விபத்துகள், சீற்றங்கள், இன மோதல்கள், மதக் கலவரங்கள், வழிபாட்டுத் தளங்களில் களவாடல் போன்றவை நடக்கும்.