கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கான காரணம் என்ன?

திங்கள், 12 மே 2008 (11:45 IST)
கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கான காரணம் என்ன? ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு காரணத்திற்காக போராட்டம் நடத்துகின்றனவே, எது நிர்ணயிக்கிறது?'

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பிரச்சினையை எதிர்கொள்ளும் தன்மை, அணுகுமுறை வேறுபடும். உதாரணமாக கருணாநிதியை எடுத்துக் கொண்டால் அவர் ரிஷபம். நடைமுறைப் பிரச்சினைகளுக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். கருணாநிதி சுக்கிரன் ராசியைச் சேர்ந்தவர்.

தன்னைச் சுற்றியுள்ளவற்றை தட்டி எடுத்து பிரச்சினைக்கான தீர்வை ஆராய்வார்.

அதே சமயம் பா.ஜ.க.வை எடுத்துக் கொண்டால், அத்வானி, வாஜ்பாய் எல்லோரும் செவ்வாயின் ராசியைச் சார்ந்தவர்கள்.

செவ்வாய் சரித்திரத்திற்குரிய கிரகம். அதனால்தான் மேஷம், விருட்சிக ராசியில் பிறந்தவர்கள் சரித்திரத்தை தூசி தட்டி எடுத்து அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை செய்து வெற்றி பெறுவார்கள்.

யாத்திரையையே ரத யாத்திரை என்கிறார்கள். அதுவே மிகவும் பழமையானது. மேஷம், விருட்சிகம் என்பது புரட்சிகரமான ராசி. புரட்சியை புதுமையாகக் கொண்டு செல்லாமல் பழமையோடு கொண்டு செல்வார்கள்.

பழைய மொந்தை, புது கள்ளு என்று சொல்வார்கள்.

மிதுனம், கன்னி ராசியுடைய கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நீதிக்காக காத்திருப்பார்கள். இதுபோன்று தங்களது எதிர்ப்பைக் காட்டுவார்கள்.

கடகம், சிம்மம் ராசிக்கார்கள் ரோட்டில் இறங்கி சண்டை போடுவார்கள்.

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பிரச்சினையைக் கொடுத்தால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் அணுகுவார்கள்.

webdunia photoWD
துலாம் ராசிக்காரர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள், மகரம், கும்பம் ராசிக்காரர்கள் ஊர்வலம் போவார்கள்.

தனுசு, மீனம், கன்னி ராசிக்கார்கள் கோஷம் எழுப்புவார்கள்.

ஒரே விஷயத்தை 12 ராசிக்காரர்களுக்கும் கொடுத்தால் ஒவ்வொரு விதமாக அணுகுவார்கள்.