சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண்களை பிடிக்குமா?
வியாழன், 8 மே 2008 (12:37 IST)
ஜாதகத்தில் மனப்பாங்கு என்ற ஒன்று உள்ளது. லக்னத்திற்கு 5ஆம் இடம்தான் மனப்பாங்குக்கான இடம்.
அடுத்தது லக்னாதிபதி என்று ஒன்று உள்ளது. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலோ, சுப கிரகத்தில் இருந்தாலோ தன்னை ஒத்த அறிவு, அழகுக் கொண்டவரை விரும்புவார்கள்.
லக்னாதிபதி எதிர் கிரகங்களுடன் அதாவது 6, 8, 12qம் வீட்டிற்குரியவனுடன், அல்லது பகை கிரகங்களுடன் சேர்ந்தால் அதள பாதாளத்தில் இருப்பவனை விரும்புவார்கள்.
இதில் எத்தனையோ நடைமுறையைப் பார்க்கிறோம். படித்து பெரும் பதவியில் இருக்கும் பெண், சுமாராக படித்த ஆணை காதலித்து திருமணம் செய்ய பிடிவாதமாக இருப்பார். அவருக்கு லக்னாபதி ராகுவுடன் உட்கார்ந்திருக்கிறார். எதிர்மறையான எண்ணங்கள் வரும்.
எனவே நிறம், குணம், பதவி என எல்லாவற்றிற்கும் ஜாதக அமைப்புதான் காரணமாகிறது.
இதுபோன்ற சமயத்தில் என்ன செய்வது?
ஜாதகத்தில் இருக்கும் அமைப்பை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விளக்க வைக்க வேண்டும்.
சனியும் சனியும் எப்பவும் காதலிப்பார்கள். அஷ்டமத்து சனி, ஏழரை சனி வந்தாலும் காதலிப்பார்கள். சனி வரும்போது வேறு ஏதாவது புது நட்பு வந்தால் நல்லதாகத் தோன்றும். சனி முடிந்ததும் நட்பும், காதலும் முடிந்துவிடும். சனி ஒரு மாய உலகத்திற்குக் கொண்டு செல்லும். அதன் பிறகு உனது திறமை என்ன, சக்தி என்ன என்பதை உனக்கு உணர்விக்கும்.