பொய் சொல்வதற்கு தூண்டுவது எது?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

பிறந்த ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் என்று ஒன்று உண்டு. அதாவது லக்னத்திற்கு 2வது ஸ்தானம் வாக்கு ஸ்தானம். அந்த வாக்கு ஸ்தானத்தில் நல்ல கிரகங்கள் அதாவது சுப கிரகங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நல்லது.

இரண்டாவது வீட்டில் புதன் இருந்தால் கவி மாரி பொழிவான். இரண்டாவது இடத்தில் வளர்பிறை சந்திரன் இருந்தால் பல மொழிகள் அறிந்தவனாக இருப்பான். குரு இருந்தால் எந்த காலத்திலும் பொய் கூற மாட்டான். ஆனால் சனி, ராகு, கேது இருந்தால் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு சில பொய்களைச் சொல்வார்கள்.

செவ்வாய் இருந்தால் திட்டவட்டமாகப் பேசுவார்கள். அதிகாரத் தொனி இருக்கும். இதுபோல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்றார் போலஅவ‌ர்களது வா‌க்கு இருக்கும்.

அடுத்து நா‌ம் பா‌ர்‌க்க வே‌ண்டியது ‌சி‌ந்தனை ‌ஸ்தான‌ம். அது 5வது இடம். 5வது இடம் குணாதிசயம். அந்த இடத்தில் என்ன கிரகம் இருக்குமோ அதற்கேற்ப சிந்தனை உதிக்கும். அதை எடுத்துத்தான் வாக்கு ஸ்தானம் கையாளும். ஒரு சிலர் உண்மையைத்தான் சொல்வார்கள். அவர்களுக்கு 5ஆம் இடத்தில் பாவ கிரகங்கள், பாதகாதிபதி உட்கார்ந்தால் தவிர்க்க முடியாமல், வாக்கில் குரு இருந்தாலும் கடைசி நேரத்தில் பொய் சொல்லி விடுவார்கள்.

நாம் பார்த்த வரைக்கும் வாக்கு ஸ்தானத்தில் 6, 8, 12க்குரியவர்களோ, 3 க்கு உரிய கிரகங்கள் இருந்தாலோ பொய் சொல்வார்கள்.

தற்போது லக்னத்திற்கு இரண்டாம் இடம் பார்ப்பது போல் ராசிக்கும் இரண்டாம் இடம் பார்க்க வேண்டும். ஒரு சிலருக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சுப கிரகம் இருந்தும், ராசிக்கு இரண்டாம் இடத்தில் பாவ கிரகம் இருக்கும். அப்படியானால் அவ‌ர்க‌ள் அ‌வ்வ‌ப்போது பொய் சொல்வார்கள்.

வாக்கு ஸ்தானத்திற்குரிய கிரகம், 11வது இடத்திற்குரியவனுடன் சேர்ந்தால் பொய் சொல்வதே தொழிலாக அமையும்.

அதுபோலதான் ஸ்திர லக்னம். உபய லக்னம். 2ல் பாதகாதிபதி இருந்தாலோ, 2ஆம் வீட்டிற்குரியவர் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலோ, 5ல் பாவ கிரகம் இருந்தாலோ அவர்கள் பொய் சொல்வார்கள்.

மோசமான கிரகத்தின் தசை நடந்தால் அந்த தசையில் நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கும். வாக்கு ஸ்தானம் 6,8,12க்குரியவன் இருந்தால் உண்மையைப் போல் பொய் சொல்வார்கள்.

புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களில் முதலாளிகள் இங்கு வந்து பணத்தை கையாளுபவர்களது ஜாதகத்தைப் பார்த்து அவரிடம் கஜானாவை கொடுக்கலாமா என்று கேட்கின்றனர்.

அப்போது, நடத்தைக் கோலம், வாக்கு ஸ்தானம் போன்றவை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அவர்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்கிறோம்.


வெப்துனியாவைப் படிக்கவும்