இப்பொழுதெல்லாம் 90 விழுக்காடு சிசேரியன் என்றாகிவிட்டது. மகப்பேறு ஸ்தானம் 5ஆம் இடம், அந்த இடத்தில் தவறான கிரகங்கள் அமர்ந்திருந்தால் மருத்துவர்கள் மூலமாக (டெஸ்ட் டூயூப்), மற்ற ஆண் மூலமாக குழந்தை, சிசேரியன் குழந்தை பிறப்பு ஏற்படும். இதை தவிர்க்க இயலாது.
நல்ல தேதி தேர்ந்தெடுத்தாலும் அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும். அதாவது பெற்றோர்களின் நேரம் சரியாக இருந்தால் அந்த குழந்தை சரியான நேரத்தில் சரியான முறையில் எந்த சிக்கலும் இல்லாமல் பிறக்கும். பெற்றோர்களின் நேரம் சரியில்லாமல் இருந்தால் எந்த முறையில் பிறந்தாலும் கெட்ட நேரத்தில் குழந்தை பிறக்கும்.
எனவே நாம் கணித்துக் கொடுத்தாலும், அந்த குழந்தை அந்த கணிப்பின்படிதான் பிறக்க வேண்டும் என்பதும் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மழலை பிறப்பதும் மாரி பொழிவதும் மகேசன் செயல்தான். அதை நம்மால் தீர்மானிக்க இயலாது.
குழந்தை ஸ்தானம் குறைவாக இருப்பவர்கள், கோச்சார கிரகங்கள் வலுவிழந்து இருப்பதால் மருத்துவத்திற்காக லட்சம் லட்சமாக செலவழித்து குழந்தைப் பேறு அடைந்தவர்களுக்கு நல்ல நாள், நேரம் பார்த்து குழந்தைப்பேறுக்காக கணித்துக் கொடுத்தாலும் ஏதாவதொரு காரணத்தினால் அது தள்ளிப்போய் கெட்ட நேரத்திலேயே குழந்தைபேறு நடைபெறுகிறது.
குறித்துக் கொடுத்தும் நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. நமது கணிப்பையும் மீறி இயற்கை அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சிசேரியன் இல்லாத நார்மல் டெலிவரி என்பதை கணித்துக் கூற இயலுமா?
ஒருவரது ஜாதகத்தைப் பார்த்து அவரது மகப்பேறு சாதாரணமானதா அல்லது சிசேரியனா என்பதை கணித்து கூற முடியும்!