ஜாதக அலங்கார நூலில் இதுபற்றி விவரமாகக் கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்தத் திதியில் பிறந்தவன் இந்த திதி நாளில் அந்தி சாயும் நேரத்தில் மரணமடைவான். இந்த நோயால் தாக்கப்பட்டு மரணமடைவான் என்று கணிக்க இயலும்.
குறை ஆயுள், தீர்க்க ஆயுள் என்பதையும் கணிக்கலாம்.
ஒருவன் ஜாதகத்தை வைத்து மரணம் அடையும் வயது, இயல்பான மரணமா, விபத்தால் மரணமா, செயற்கையா, நோயால் மரணமா என்பதை அறியலாம்.
நூல்களைப் படித்து அந்த விதி முறையை கருத்தில் கொண்டு அதை செயல்படுத்திப் பார்க்கலாம். ஜோதிடம் என்பது நடைமுறை விஞ்ஞானம்தான்.
முன்பெல்லாம் ஜாதகத்தைப் பார்த்து குதிரை வாங்குவான். யானை வாங்குவான் என்று கூறினார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் 100 குதிரைத் திறன் உடைய வாகனம் வாங்குவான் என்று கூறுகிறோம்.