டிச‌ம்ப‌ர் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28

வியாழன், 29 நவம்பர் 2012 (19:58 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சில் அறிவு முதிர்ச்சி வெளிப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். நிலுவையில் இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்துப் பேசுவார்கள்.

ஆனால் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். ஷேர் மூலம் லாபம் வரும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்‌தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். திடீர் முடிவுகளால் புகழடையும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 9, 12, 21, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

வெப்துனியாவைப் படிக்கவும்