நவம்பர் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30

புதன், 31 அக்டோபர் 2012 (19:17 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உதாசீனப்படுத்தியவர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நவீன ரக கேமரா செல்போன் வாங்குவீர்கள்.

ஆனால் பிள்ளைகள் அவ்வப்போது பிடிவாதமாக இருப்பார்கள். கறாராகப் பேசுவீர்கள். அரசு வேலைகள் முடியும். கண் வலி குணமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். வீடு, நிலம் வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும்.

வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூகமானப் பேச்சால் தீர்வு காண்பது நல்லது. திடீர் பணவரவு உண்டு. சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள். சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து விலகும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 3, 10, 12, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி

வெப்துனியாவைப் படிக்கவும்