நவம்பர் மாத எண் ஜோதிடம் : 7, 16, 25

புதன், 31 அக்டோபர் 2012 (18:59 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.

திடீர் பயணங்கள் உண்டு. புது நட்பு மலரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். உங்களின் ஆளமைத் திறன் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் தெரியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.

சகோதர‌ர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். பகை, ஏமாற்றம், நிம்மதியின்மை, மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். எதிலும் நஷ்டம், ஆர்வமின்மை வந்துச் செல்லும். விபத்து, உறவினர், நண்பர்கள் பகை வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவமளியுங்கள்.

வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்‌தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதட்டப்படாதீர்கள். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். கோபத்தை குறைக்க வேண்டிய மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 7, 2, 15, 20, 25
அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்