நவம்பர் மாத எண் ஜோதிடம் : 8, 17, 26

புதன், 31 அக்டோபர் 2012 (18:54 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தொட்டது துலங்கும். வி. ஐ. பிகள், நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். வர வேண்டிய பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கிருந்த கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். விலகிச் சென்ற பழைய சொந்தங்களெல்லாம் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். ஆனால் பேச்சில் நிதானம் தேவை. பழைய பிரச்னைகள், சிக்கல்கள், வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

வேற்றுமதத்தவர்களின் நட்பு கிடைக்கும். ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். சாதுக்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்‌தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினர்களே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். தலை நிமிர்ந்து நடக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 8, 14, 15, 17, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்

வெப்துனியாவைப் படிக்கவும்