ஆக‌ஸ்‌ட் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 1, 10, 19, 28

வியாழன், 31 ஜூலை 2008 (20:29 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும். அழகு, இளமை கூடும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு தேவையான அளவு இருக்கும். பிள்ளைகளின் தேவையறிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. தலைவலி, வயிற்றுவலி நீங்கும். தாய்வழி உறவினர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டு கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக தீர்க்க வழிகாண்பீர்கள்.

வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புரோக்கரேஜ், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் அதிரடி செயல்களைக் கண்டு அனைவரும் வியப்பார்கள். கலைஞர்களின் கைகள் ஓங்கும். அதிரடி முடிவுகளால் நினைத்ததை முடிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 7, 12, 16, 21, 25, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரீம் வெள்ளை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி

வெப்துனியாவைப் படிக்கவும்