8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறை விலகும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் தேடி வரும். வீட்டை அலங்கரிப்பீர்கள்.
சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வருங்காலத்திற்கான திட்டமொன்றை தீட்டுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். முன்கோபம் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுக எதிப்புகளை வெல்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். விட்டதைப் பிடிக்கும் மாதமிது.