ஜூ‌ன் மாத எ‌ண் ஜோ‌திட‌ம் : 9, 18, 27

சனி, 31 மே 2008 (19:29 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு தேவையான அளவு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமூகமான நிலை காணப்படும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையில் வீட்டில் மகிழ்ச்சி உண்டு. வயிற்றுவலி, அலைச்சல் வந்துபோகும். பிள்ளைகள் அவ்வப்பபோது செலவு வைப்பார்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். . முன் கோபம், வீண் அலைச்சல் நீங்கும். வெளியூர் பயணங்களால் மன நிம்மதி பெறுகும். ஆடம்பரச் செலவுகளை தவிப்பீர்கள்.

வெளிவட்டாரம் சிறப்பாக அமையும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். புது எண்ணங்கள் மனதில் தோன்றும். பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அரசால் ஆதாயம் பெருகும். பெண்களுக்கு காதல் கைகூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அரசியலில் ஆர்வம் பிறக்கும். சொத்துப் பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள். . சொந்தம் - பந்தங்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். மாணவர்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.

வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி பெறுகும். இரும்பு, கெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே விட்டுக்கொடுத்து போவீர்கள். புது முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் தொந்தரவு விலகும். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். மகிழ்ச்சி தங்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள் - 2, 8, 11, 17, 20, 26, 29
அதிஷ்ட எண்கள் - 2, 8
அதிஷ்ட நிறங்கள் - இளம்சிவப்பு, பச்சை
அதிஷ்ட கிழமைகள் - வெள்ளி, ஞாயிறு

வெப்துனியாவைப் படிக்கவும்