ஜனவ‌ரி மாத‌எ‌ண் ஜோ‌திட‌ம் 3, 12, 21, 30

வெள்ளி, 4 ஜனவரி 2008 (20:00 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணவரவால் விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

முன்கோபத்தை குறையுங்கள். உடன்பிறந்தவர்களால் மனநிறைவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் வந்துபோகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்துவிலகும். எடுத்த வேலையை விரைந்து முடிக்க எண்னுவீர்கள். சொத்துச் சம்பந்தப் பட்ட வழக்குகளை நிதானமாக கையாளுங்கள்.

வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனிநபர் விமர்சனத்தை தவிர்க்கவும். கலைத்துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணரும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 1, 5, 10, 14, 19, 23, 28,
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: மெருன், கிளிப் பச்சை
அதிஷ்ட கிழமைகள் : புதன், வியாழன்

வெப்துனியாவைப் படிக்கவும்