6,15,24

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (13:15 IST)
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குழப்பங்கள் தீரும்.

கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. முன் கோபத்தை குறைக்கப் பாருங்கள். உயர் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். தாய் வழி உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து போகும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பழைய சொந்தங்களை சந்திப்பதால் மன நிறைவு கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தலை சுத்தல், வயிற்று வலி வந்து போகும்.

வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவதால் மன நிம்மதி பெறுகும். கல்யாணத்தடைகள் நீங்கும். நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரபலங்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் வந்து போகும். வேற்று மதத்தினரால் நன்மை பிறக்கும். மாணவர்களின் நினைவுத்திறன் பெறுகும். உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். விரும்பிய கோர்ஸில் சேர்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் நிலவி வந்த தொந்தரவுகள் மறையும். வழக்குகள் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி பிறக்கும். உணவு, எண்டர்பிரைஸ், ஷேர் வகைகளால் ஆதாயம் பெறுகும். கூட்டுத்தொழிலில் சுமுகமான லாபம் உண்டு. பங்குதாரர்களிடையே நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. வெளி நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். மனதில் உற்சாகம் பொங்கும் மாதமிது.

வெப்துனியாவைப் படிக்கவும்