2,11,19,29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஆடை, ஆபரணம் சேரும்.
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும். தக்க சமயத்தில் உதவுவார்கள். பிள்ளைகளை அன்புடன் நடத்துவீர்கள். அவர்களின் வருங்காலத்திற்காக சில ஏற்பாடுகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடனை அடைக்கும் அளவிற்கு பணப்புழக்கம் அதிகமாகும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். உறவினர்கள் ஆச்சர்யம்படுமளவிற்கு முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். மருத்துவச் செலவுகள் விலகும்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கல்யாணப்பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பூர்வீகச் சொத்தை மாற்றுவீர்கள். இழுபறியான காரியங்களை எல்லாம் இனி முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். நீண்ட நாளாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். உயர் கல்வியில் வெற்றி பெருவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வெளி நாட்டுப் பயணங்கள் தேடிவரும்.
வியாபாத்தில் சுறுசுறுப்படைவீர்கள். பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். உணவு, புரோக்கரேஜ், மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். கூடுதல் முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பணிகளில் இருந்த தேக்க நிலையை சரிசெய்வீர்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பளப் பிரச்ச்னை தீர்வுக்கு வரும். தொட்டகாரியங்களில் வெற்றியடையும் மாதமிது.