எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்?
திங்கள், 29 மார்ச் 2010 (16:18 IST)
ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் தனி சிறப்பம்சம் உண்டு என்று கூறியிருந்தீர்கள். மனிதர்களின் பழக்க வழக்கம் கூட ராசியின் அடிப்படையில் வேறுபடும் என்றும், ஒருவர் உணவு சாப்பிடும் முறை, பிடித்த உணவு வகைகளைக் கூட ராசியைக் கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் சமீபத்திய கட்டுரை ஒன்றில் கூறியிருந்தீர்கள். அந்த வகையில் எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார் என்று விரிவாக் கூறுங்கள்?
பதில்: ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.
காதலிப்பார்கள், காதலில் ஈடுபாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களையும் குறிப்பிடலாம். ஆனால் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவரை கைபிடிப்பார்களா? என்பதை அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே கணிக்க முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர், தான்காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும்.
பொதுவாக எந்த லக்னம்/ராசியாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படும் 7, 8ஆம் வீடுகளைக் கொண்டே எந்த வகையான திருமணம் அமையும் எனக் கூற வேண்டும். ஒருவருக்கு 7, 8ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து பாவ கிரகங்களின் பார்வை/சேர்க்கை இல்லாமல் இருந்தால் அவருக்கு பெற்றோர் பார்க்கும் வரன் துணைவராக அமைவார்.
களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே (அத்தை, மாமன் முறையில்) திருமணம் நடைபெறும்.