ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதாக கூறப்படுகிறதே? அது ஏன்?
சனி, 7 பிப்ரவரி 2009 (16:15 IST)
ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. எனவே, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்பதால் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் மக்கள் தொகையை பெருக்குங்கள் என மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
மேற்கூறியது போல் ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு ஜோதிட ரீதியாக ஏதேனும் காரணம் உள்ளதா?
பதில்: உலகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரியவர் சனி. அது இயற்கையாகவும் இருக்கலாம் அல்லது செயற்கையாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் அணுகுண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான் என்பதால் அது சனியின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது. தற்போது சனியில் வீட்டில் குரு நுழைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தங்களின் எண்ணிக்கை/பலம் குறைவதாகவே கருதுவர்.
மேற்கண்ட கேள்விக்கான பதிலும் இதுதான். இதனுடன் குருப் பெயர்ச்சியின் தாக்கமும் இணையும். இந்த நிலை 2 ஆண்டுகளுக்கு (2009/2010) வரை தொடரும்.
எனினும் இப்படி பாதிக்கப்பட்ட நாடுகள் தன்னைப் போல் பிற நாடுகளும் பாதிக்கப்படக் கூடாது என்று கருதும். அந்த வகையில் சில நற்பணிகளிலும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஈடுபடக் கூடும். இதற்கும் குருப் பெயர்ச்சிதான் காரணம்.