சனிக்கிழமையின் தாக்கம் பற்றி கூறுங்கள்?

புதன், 30 ஜூலை 2008 (17:53 IST)
சனிக்கிழமை என்பது சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் கிழமையாகும். மற்ற கிரகங்களின் தாக்கத்தை விட அந்தந்த கிழமைக்கு அந்தந்த கிரகங்களின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும்.

சனிக்கிழமைகளில் சனி கிரகத்தில் இருந்து வரும் கதிர் அலை பூமியின் மீது அதிகமாகப் படும்.

சனி என்பது என்ன? அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் கார்பன், கார்பன் மோனாக்சைடு. சனியில் பார்த்தால் கார்பன்தான் அதிகமாக இருக்கும். அதன் கதிர்வீச்சு இருக்கும்போது அதற்கேற்ற எண்ண அலைகள்தான் பரவும்.

இயல்புக்கு மாறான பேச்சு, நடவடிக்கை, மனம் போக வேண்டாத இடத்தை நோக்கியே பயணிப்பது போன்றவை நடக்கும்.

சனிதான் ஆல்கஹாலுக்கும் உரியவன். அதனால்தான் அன்றைய தினம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் சனிதான் தொழிலாளர்களுக்கும் உரியவன். அன்றைய தினம் பார்த்தால் கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், வாரக் கூலி போன்றவையும் சனிக்கிழமைகளில்தான் வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த கூலியை வாங்கிக் கொண்டு குடிப்பது போன்றவற்றில் ஈடுபடுவதற்கும் அதுவே காரணமாகிறது.

சனி கிரகம் கட்டுப்பாட்டை உடைப்பதற்கு உரியது. அதாவது செவ்வாய்க்கிழமை கட்டுப்பாட்டுக்கான கிரகம். சனி கிரகம் அந்த கட்டுப்பாட்டை உடைப்பதற்கான கிரகமாக இருக்கும். என்னதான் இருக்கிறது போய் பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தை உருவாக்கும்.

களவும் கற்று மற என்று சொல்வதும் சனிதான். அன்றைய தினம் களவு போகுதல் அதிகமாக இருக்கும். தவறான நடவடிக்கைகள் அதிகமாக நடக்கும்.

முறையற்ற உறவுகள், தொடர்புகள், இயல்புக்கு மாறான நடைமுறைகள் போன்றவை அன்று அதிகமாக இருக்கும்.

ஆனால் சனி கிரகம் தான் படிப்பினையைத் தரக்கூடிய கிரகம். சிலர் அதன் தாக்கத்தில் செய்த செயல்களை வைத்து அது ஒத்து வராது என்று படிப்பினையாக எடுத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் அந்த காரியத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்.

ஓஷோ போன்றுதான், ஒரு விஷயத்தைப் போன்று யோசித்துக் கொண்டே இருப்பதை விட, அது என்ன என்று போய் பார்த்தே விடுவது நல்லது என்று சொல்வார். அதுவும் சனிதான்.

உள் மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்ற துடிப்பது, நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவது போன்றவையும் சனிதான். சனிக்கிழமைகளில் பார்த்தால் வித்தியாசமாக வருபவர்கள் உண்டு. சும்மா ஒரு மாறுதலுக்காக இப்படி செய்தேன் என்று சொல்வதற்கும் காரணம் சனிதான்.

அன்றைய தினம் பார்த்தால் குடும்பத்திற்குள் சண்டைகள் வருவதும் அதிகரிக்கும். கட்டுப்பாடாக ஒரு குடும்பம் இருக்கும். அந்த கட்டுப்பாடுகள் உடைவதும் சனிக்கிழமையாகத்தான் இருக்கும். முரண்பாடுகள், வாக்குவாதம் போன்றவையும் சனியில் அதிகமாக இருக்கும்.

ஏனெனில் சனியில் இருக்கும் வாயுக்களின் கூட்டமைப்பு அந்த மாதிரி உள்ளது.

ஆனால் சனிக்கிழமையின் தாக்கம் மற்ற கிழமைகளில் கொஞ்சம் நேர்மறையாக இருக்கும்.

புதன், வெள்ளிக் கிழமைகளில் இந்த சனியின் கதிர் அலைகள் நேர்மறையாக இருக்கும்.

அதாவது மினரல் வாட்டர் எப்படி ஒரு அட்டையின் மீது வேகமாக மோதும்போது தூய்மையடைகிறதோ அப்படித்தான், சனியின் கதிர் அலைகளும் மற்ற கிழமைகளில் நேர்மறையாகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்