நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி நிச்சயம்: ஜோதிடம்

வியாழன், 17 ஜூலை 2008 (14:40 IST)
ஜூலை 22ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெறுவது நிச்சயம் என்று ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் கூறியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐ.மு. கூட்டணி அரசு வெற்றி பெறுமா? தோல்வியடையுமா? என்பது குறித்து ஒவ்வொரு நாளும் கணிப்புகள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், மன்மோகன் அரசு நிச்சயம் தப்பிவிடும் என்று எமது ஜோதிடர் வித்யாதரன் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு நிச்சயம் வெற்றி பெறும் என கடந்த வாரம் ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் தெரிவித்திருந்தார்.

தற்போது அரசியல் சதுரங்கத்தில் பா.ஜ.க., இடதுசாரிகள் கை ஓங்கியுள்ளது போன்ற சூழலில், மத்திய அரசு தப்புமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:

webdunia photoWD
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வரும் 20ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், 21, 22ஆம் தேதிகளில் அவருக்கு ஆதரவாக மாற்றங்கள் நிகழும்.

மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்கக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அந்த 2 நாட்களில் அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். இதில் சந்தேகமே இல்லை என்று கூறினார்.