முறை தவறிய காமம் மற்ற பிற வாழ்க்கைக்கு வடிகாலாக இருக்கிறதா?
சனி, 28 ஜூன் 2008 (09:50 IST)
இல்லை, முறை தவறிய காமத்தை ஒத்துக்க முடியாது. போன வாரம் ஒரு அம்மா வந்திருந்தாங்க. மலர்ந்த முகம், லட்சுமி வடிவானவங்க. அந்த அம்மா ஜாதகத்துல லக்னத்துக்கு 7வது வீட்டீல் சனியும், கேதுவும் உட்கார்ந்திருக்கு. கேது திசை அந்த அம்மாவுக்கு ஆரம்பித்துவிட்டது. அவங்க கணவரோட ஜாதகத்தை பார்த்தேன். அது நல்லாயிருந்தது. இவங்க ஜாதகத்துல சனியும், கேதுவும் ஒன்னா இருக்குது.
நீங்க உங்க இனத்தைவிட குறைவான இனத்தில் மணம் முடித்தீர்களா அல்லது கலப்பு இனத்தில் பிறந்தவரை மணந்தீர்களா என்று கேட்டேன். இல்லை, அப்படியெல்லாம் இல்லை. என்னோட இனத்திலேயேதான் கல்யாணம் பண்ணினேன் என்று சொன்னார்கள். இல்லை, உங்க ஜாதகப்படி உங்களைவிட நீசமானவங்கள கல்யாணம் முடிப்பீங்கன்னு இருக்கு. அப்படி நீங்க உயர்வானங்கள கல்யாணம் முடிச்சிருந்தீங்கன்னா, இப்ப உங்களுக்கு கேது திசை ஆரம்பிச்சிருக்கு. அதாவது 7ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானத்துல இருக்கிறது. நீச கிரகமான சனியோட சேர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் ஐந்தரை வருடத்திற்கு இந்த திசை இருக்கு. இந்த நேரத்துல உங்க கணவருக்கு நீசஸ்திரியோட தொடர்பிருக்குமேன்னு கேட்டேன்.
உடனே அந்த அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க. அவரோட கல்வித் தகுதி எல்லாம் பார்க்காம, வேலைக்காரியோட போயிட்டாருங்கன்னு சொன்னாங்க.
இந்த மாதிரி ஆவதும் உண்டு. கணவன் ஜாதகத்தால மனைவி கெடுவதும் உண்டு. மனைவி ஜாதகத்தில் கெட்ட திசைகள் வரும்போது கணவன் திசை மாறுவதும் உண்டு.
இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?
இதற்கும் பரிகாரம் உண்டு. அந்த அம்மா அவர் மேல சந்தேகப்படல. இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாதீர்கள். ஏனென்றால், உங்க ஜாதகப்படி உங்கள் கணவர் பின்னமாகிற நேரம் இது. பின்னமாதல் என்றால் அவமானப்படுதல். ஏனென்றால், 7ஆம் இடத்தில் சனியும் கேதுவும் இருந்தால் கணவன் ஒவ்வாமை அடைதல், விபத்துக்குள்ளாகுதல், சிறைத் தண்டனைக்குள்ளாகுதல் அல்லது அவமானப்படுத்தப்படுதல் என்பதெல்லாம் ஆகும்.
கேது தசை வந்தாலே...
அப்ப என்ன செய்ய சொல்றீங்க. அவர் தப்பு செய்வதை சரின்னு சொல்றீங்களா? என்று அந்த அம்மா கேட்டாங்க. அப்படியில்லீங்க. ஜாதகப்படி விவாகரத்து பெறக்கூடிய நேரம் இது. அப்படி விவாகரத்து பெற்றாலும், அடுத்து நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னாலும், அவரும் ஏற்கனவே நீந்தி முத்தெடுத்தவராதான் வருவார். இதைவிட மோசமாதான் வரும். அதனால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கன்னு சொல்லி சில பரிகாரங்கள் எல்லாம் சொன்னேன். அப்புறம் சனி, கேது காம்பினேஷனுக்கு சில கோயில்களெல்லாம் இருக்கு. அங்கெல்லாம் போங்க. சில விரத முறைகளெல்லாம் இருக்கு, அதெல்லாம் சொன்னேன்.
கேது திசை நடக்கிறவர்களுக்கெல்லாம் காம உணர்வு இருக்கும். அந்த மாதிரி நேரத்துல இந்த எல்லாத்தையும் மூடி மறைச்சி ஒரு உடை உடுத்தியிருப்பாங்க. அப்படியெல்லாம் உடுத்தாதீங்க. கொஞ்சம் கவர்ச்சியா உடுத்துங்க. கோயில சொல்லியிருக்கேன். அதுக்கும் போங்க, இதையும் செய்யுங்க. சில உணவு வகைகளெல்லாம் இருக்கு. அதையும் எடுத்துக்குங்க. கேது திசை வந்த பிறகு, இந்த அம்மா செவ்வாய்கிழமை, வெள்ளிகிழமை, ஞாயிற்றுக்கிழமை விரதம்னு இருந்திருக்காங்க. கேது பாதி சன்னியாச குணத்தை கொடுக்கும், பாதி காம குணத்தை கொடுக்கும். இரண்டுக்கும் நடுவில் தத்தளிப்பார்கள். அவர்களைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கும். காமத்தை வெளிப்படுத்தவும் தெரியாது, தெளிவுபெறவும் முடியாது. ஒரு போராட்டமே நடக்கும்.
இந்த மாதிரி கேது திசை நடக்கிற பொண்ணுதான் டக்குனு மிஸ்ஸாகும். காலைல தலைக்கு தண்ணி ஊத்திக்கிட்டு துளசி மாடத்தை சுற்றி வந்து காக்கைக்கு சாப்பாடு வைக்கிற பொண்ணாச்சே, இப்படி பண்ணிடுச்சேன்னு சொல்வாங்க. இதுக்கெல்லாம் காரணம் கேது தசை. தெய்வீகத்துக்கும், காமத்துக்கும் நடுவில் நம்ம மனசுல பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கோயிலுக்குப் போங்க வேண்டாம்னு சொல்லல. ஆனால் கணவனோட தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கன்னு சில பரிகாரங்களையும் சொல்லி அனுப்பினேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு வந்தாங்க. இப்ப கொஞ்சம் ஏறெடுத்துப் பார்க்கிறாருங்கன்னு சொன்னாங்க.
இந்த காமம் என்பது பிரதானமானது. கணவன் ஜாதகத்தால மனைவி பாதை மாறுவதும் உண்டு அல்லது மனைவி ஜாதகத்தால கணவன் பாதை மாறுவதும் உண்டு.