ரோமில் நடந்த கருத்தரங்கில், உணவு உற்பத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் உணவு உற்பத்தி குறைகிறது என்று கூறியிருக்கிறார்கள். ஜோதிடப்படி என்ன கூறுகிறீர்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
ஆண்டுப் பலன் கூறும்போதே, உணவு உற்பத்தி குறையும், பருவ நிலை மாறும் என்று சொல்லியிருக்கிறோம். பருவ நிலை மாறி மழை பொழிவதால் விளை நிலங்கள், விளைப் பொருட்கள் பாதிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறோம்.
webdunia photo
WD
இதற்குக் காரணம் சனிதான். சனிதான் விவசாயிகளுக்குரிய கிரகம். விவசாய தொழிலாளி என்று சொல்கிறோமே ஏர் உழுது, மண் வெட்டி எடுத்து செய்யும் வேலைகள் மிகவும் கடினமான வேலைகள். பூமி பரந்து விரிந்து இருக்கிறது. அசாத்தியமான ஆற்றல் உடையது. பஞ்ச பூதத்தில் ஒன்றான பூமியை தன்னுடைய உடல் உழைப்பினால் அதனை உடைத்து உழுது ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கினான் என்றால் அது சனியின் ஆதிக்கத்தால்தான்.
இத்தனை காரியத்திற்கும் உரிய சனி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக சரியில்லாமல் உள்ளது. இரண்டரை ஆண்டுகளாக கடகத்தில் பகைப்பட்டு உட்கார்ந்திருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிம்மத்தில் பகைப்பட்டு உட்கார்ந்திருக்கிறது.
அதனால்தான் கடந்த மூன்றரை ஆண்டுகளில் உலக அளவில் பல விளை நிலங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. இந்த நிலை இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்குத் தொடரும். அதாவது 2011ஆம் ஆண்டு இறுதி வரை இந்த நிலை தொடரும். அதன் பிறகுதான் விளை நிலங்களில் கட்டடங்களை கட்டக் கூடாது என்ற சட்டங்கள் கடுமையாக்கப்படும். அதன்பிறகுதான் இந்த நிலை மாறும்.
அதேபோல விவசாயிகளுக்குரிய கிரகமான சனி பகை வீட்டில் அமர்ந்ததால்தான் விவசாயிகள் சோம்பேறிகளாக ஆனார்கள்.
பஞ்சம் ஏதும் ஏற்படும் வாய்ப்பு உண்டாகுமா?
பஞ்சம் என்றால் அறிவிக்கப்படாத பஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த மூன்றரை ஆண்டுகளில் அதுபோன்ற நிலை ஏற்படும் ஒரு வாய்ப்பும் உண்டு.