விலைவாசி பிரச்சினை எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்?
புதன், 30 ஏப்ரல் 2008 (16:45 IST)
விலைவாசி பிரச்சினை ஒரு பக்கம் கடுமையாக இருக்கும். சுக்கிரன் எப்போதுமே நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் புசியுமாம் என்பது போல நல்லதுக்கும் கெட்டதுக்கும் உரிய கிரகம்.
அந்த தசை நடக்கும் போது விலைவாசியைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினம்தான். இந்தியாவிற்கு ஏழரை சனி முடிந்த பிறகு மட்டும்தான் விலைவாசி எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
27.09.2009 அன்று இந்தியாவிற்கு ஏழரை சனி முடிகிறது. அதன்பிறகு விலைவாசி கட்டுப்படும்.
இந்திய அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்த விலைவாசி ஏற்றம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.