தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி?

புதன், 5 மார்ச் 2008 (12:07 IST)
தமிழக ஜாதகத்தைப் பொறுத்த வரை வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி சில மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதாவது வரும் 9.4.2008 அன்று ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுகிறது.

பொதுவாகப் பார்க்கப் போனால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்பொழுது வேண்டுமானால் ஒரே கூட்டணி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கூட்டணி மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

குரு, சனி, ராகு, கேது போன்றவை எல்லாம் ராஜ கிரகங்கள். இதனை வைத்துப் பார்க்கப் போனால் இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகளை இந்த கிரகங்கள் செய்து வருகின்றன.

முக்கியமானது தேர்தல் தேதி. அதை வைத்துத்தான் தேர்தல் முடிவை கணிக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்