பொது பட்ஜெட் தாக்கல் செய்துள்ள இன்று அஷ்டமி திதி நடக்கிறது. காலையில் கொஞ்ச நேரம் அனுஷ நட்சத்திரம் நடந்தது. பிறகு கேட்டை நட்சத்திரம் தொடங்கியது.
நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும்போது கேட்டை நட்சத்திரம் நடந்தது.
அஷ்டமி திதி என்பதால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்வது ஆள்பவர்களுக்கு சரியில்லாமல் போகும். மீண்டும் இவர் பட்ஜெட் தாக்கல் செய்வது கடினம்.
கேட்டை நட்சத்திரம் ஏழை, எளிய மக்களுக்குரிய நட்சத்திரம். ஆள்பவர்களுக்கு இன்று மகா மட்டமான நாள். அஷ்டமி திதி.
நீண்ட காலமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு, விவசாயிகளுக்கு, என்.ஆர்.ஐ., முதல்தர வியாபாரிகளுக்கு அதிக நன்மைகள் தரக்கூடியதாக அமையும்.
வங்கி பரிமாற்றம், அறக்கட்டளைகளுக்கு சலுகைகள் கிடைக்கும்.
ஆனால் தற்போதைய ஆளும் கட்சியினர் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யமாட்டார்கள்.