கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஜாதகம் பார்க்காமல் இருப்பதால் எந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் இ‌ல்லையே?

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (16:56 IST)
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் கோள்களின் இயக்கத்திற்குள்தான் நீங்கள் வருகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாகவும் இருந்தாலும் சரி, அவர்களுக்கும் இதே போன்று கிரகங்களின் தாக்கம் இருக்கும்.

நீங்கள் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் கிரகத்தின் ஆட்சிக்குட்பட்டுதான் உங்களது செயல்பாடு அமையும்.

பூமியின் அதிர்வலைகளை ஜோதிடத்தின் மூலம் தெரிந்து கொள்ளும்போது அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் எடுக்கலாம். அதாவது மேகத்தை வைத்து மழை பெய்வதை அறிந்து கொண்டால் வெளியே செல்லும்போது குடையுடன் செல்லலாமே, அதுபோலத்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்