மும்பையில் நடக்கும் செயல் ஒவ்வாததாக உள்ளது. இதற்குக் காரணம்?

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (16:44 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

ஏற்கனவே இந்தியாவிற்கு ஏழரைச் சனி நடக்கிறது என்று கூறியுள்ளோம். அப்போதே மகாராஷ்டிர மாநிலம் பாதிக்கும் என்றும் கூறியுள்ளோம்.

மகாராஷ்டிர மாநிலத்தை தற்போது சனி ஆட்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் சிம்ம ராசி மாநிலம். சிம்ம ராசிக்கு ஜென்ம சனி. இதனால்தான் அங்கு கலவரம், குழப்பம், வன்முறை அதிகரிக்கிறது. இந்த நிலை 27.9.2009 வரை நீடிக்கும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இது அதிகரிக்கும். தலைவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, தீவிரவாதிகள் அட்டகாசம் ஓங்கும்.

இந்தியாவிற்கும் இதே நிலைதான் நீடிக்கும். இந்தியாவிற்கு தற்போது பாதச் சனி நடக்கிறது. அதாவது ஏழரை ஆண்டுகளில் இறுதியான இரண்டரை ஆண்டுகள் நடக்கும் சனியை பாதச் சனி என்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்