முகத் தோற்றத்தை வைத்து கணிக்கும் ஜாதக முறையை சாமுத்ரிகா லட்சணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒருவரைப் பார்த்து அவரது அங்க அடையாளங்களை வைத்து அவரது ஜாதகத்தை கணித்த விடலாம்.
சூரியன் வலுவாக இருந்தால் சிவந்த கண்கள், உயர்ந்த மூக்கு முனை, நீண்ட நாசி போன்ற அம்சங்கள் இருக்கும்.
சந்திரனின் ராசி கடகம், நட்சத்திரம் ரோகிணி, அஸ்தம், திருவோணம். சந்திரன் வலுவாக இருந்தால் அல்லது சந்திரனின் ராசி அல்லது சந்திரனின் குணம் கொண்டவர்களாக இருப்பவர்களுக்கு உருண்ட கண்கள், வட்ட முகம், ஆணுக்கு ஆணே ஆசைப்படும் அளவிற்கு அழகானவர்கள், துள்ளல் நடை கொண்டவர்களாக இருப்பர்.
செவ்வாய் கிரகத்தின் ராசி மேஷம், விருச்சிகம். நட்சத்திரங்கள் மிருக சீரிடம் அவிட்டம், சித்திரை என இருக்கும்.
செவ்வாய் ராசிக்காரர்கள் உட்காரும்போதே கம்பீரமாக இருப்பார்கள். நறுக்குத் தெரித்தார் போல் நான்கு வார்த்தைதான் பேசுவார்கள். வளவளவெனப் பேச மாட்டார்கள்.
சிறிய அடியாக வைத்தாலும் வேகமாக நடப்பார்கள். அதாவது யானை நடையும், குதிரை ஓட்டமும் போல் நடப்பார்கள். அதிகமான உயரம் இல்லாமல் நடுத்தர உயரம், பறந்த நெற்றி, ஆணுக்குரிய அம்சங்கள் தீர்க்கமாக இருக்கும்.
மேஷ ராசி, விருச்சிக ராசியினர் பேசும்போது உறுதியாக பேசுவர். அதை வைத்தே செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்திருப்பர்கள் என்பதை அறியலாம்.
முக அமைப்பை வைத்தே அவர்கள் எந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்று பார்க்கலாம்.
தேதி தெரியாமல் வரும் ஜாதகக்காரர் முதலில் எந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கிறார் என்பதை அறிய வேண்டும். பின்னர் அதில் எந்த ராசி, நட்சத்திரம் என்பதை அறிய வேண்டும்.
ஒரு சில கிரகங்களுக்கு இரண்டு ராசி இருக்கும்.
கொஞ்சம் அவரிடம் பேசினாலே அவரது கிரக ஆதிக்கம் தெரிந்து விடும். மேலும் அவரது கை ரேகை பார்த்து செவ்வாய் மேடு எப்படி இருக்கிறது என்பதை வைத்தும் கணித்துவிடலாம்.
ஒருவரின் பதிலளிக்கும் விதம், உண்ணக்கூடிய உணவு வகை போன்றவற்றை வைத்துக்கூட அவரது ஜாதகத்தை கண்டுபிடித்துவிடலாம்.
ஒரு வீட்டிற்கு வரும்போது கும்ப ராசிக்காரர்கள் சாப்பாடு எங்கே இருக்கிறதோ அங்கே தான் நுழைவார்கள். அதுபோல் 10 பேர் ஒரு வீட்டிற்குள் நுழைந்தால் ஒவ்வொருவரும் எங்கெங்கு போய் அமருகிறார்களோ அதை வைத்தே அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை அறிந்துவிடலாம்.
பிறந்த தேதி இல்லாதவர்களுக்கு சாமுத்ரிகா லட்சணத்தைக் கொண்டு ஜாதகத்தை சிறப்பாகவே கணிக்கலாம்.