இலங்கை அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளது. அது பற்றி?

சனி, 19 ஜனவரி 2008 (12:43 IST)
இலங்கை நாடு ஒரு ராசியில் இருக்கிறது. அதாவது விருச்சிக ராசி. இப்போது ஆண்டு கொண்டு இருப்பவரும் விருச்சிக ராசி. பல நூற்றாண்டு காலமாக போராடிக் கொண்டிருப்பவர்களும் விருச்சிக ராசி. பல ஆண்டுகாலமாக நடந்து வரும் இந்த யுத்தம் பலமாக இருக்கும். அனைவருமே ஒரே ராசியாக இருப்பதால் போல் பலமடையும். உலகளவிலேயே இது பெரிய யுத்தம்.

மூவருமே ஒரே ராசியில் இருந்தாலும், தசாபுத்தி வைத்துப் பார்த்தால் கால் நூற்றாண்டு காலமாக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு தசாபுத்தி நன்றாக உள்ளது. அதனால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். இழப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால் இலக்கை அடையும் வாய்ப்பு உள்ளது. அதில் மாற்றமில்லை.

நவம்பர் 15ஆம் தேதி என்பதை விட தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட நாளில் இருந்தே புலிகளுக்கு சாதகமான ஒரு அமைப்பு உள்ளது. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது புலிகளுக்கு ஒரு நல்ல விஷயமாக அமைந்துவிட்டது. அவரது கிரக அமைப்பிற்கு அவர் கொல்லப்பட்ட நாள் நட்சத்திரம் வைத்துப் பார்த்தால் புலிகளின் தசாபுத்திக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதுதான் ஒரு திருப்புமுனை.

தசாபுத்தி என்பது என்ன?

அவர் சனி திசையில் பிறந்திருப்பார். சுக்கிரன், புதன் திசைகளை கடந்து வந்திருப்பார். அதுதான் தசாபுத்தி என்று கூறப்படுகிறது.

ஜனவரி 15 முதல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு கெட்ட நேரம் துவங்குகிறது. அது போராடுபவர்களுக்கு சாதகமாக அமையும்.

இந்தியா ஈடுபட்டு தீர்வு காண சாத்தியம் உண்டா?

இந்த விஷயத்தில் இந்தியா அவமானப்படும். இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது பெருத்த அவமானத்தை சந்திக்க நேரிடும். சாதாரணமாக இருந்துவிட்டால் இந்தியாவிற்கு நல்லது.

வரும் ஏப்ரல் 9ல் இருந்து கடகத்திலேயே கேது அமருகிறார். கேது ஆன்மீக கிரகம். எல்லா மாநிலத்திலும் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். ஆன்மீகம் சார்ந்த கட்சிகள் வலுபெருறும், ஆன்மீக மற்ற கட்சிகள் வலுவிழக்கும்.

கடகத்தில் கேது அமருவதால் இந்தியா தனது போக்கை மாற்றிக் கொள்வது நல்லது. அண்டை நாடுகளுடனான அணுகுமுறையை மாற்றிக் கொள்ளலாம். அதிக தலையீடு செய்வது, முந்திப்போய் பிரகடனம் செய்வது சரியல்ல. ஆட்சியாளர்களுக்கு சாதகமாக இல்லாமல் போராடுபவர்களுக்கு சாதகமாக இருந்தால் ஜாதக ரீதியாக இந்தியாவிற்கு நல்லது. ராசிக்குள் கேது வந்து அமர்ந்தாலே அண்டையர்களுடன் பகை ஏற்படும். கருத்து மோதல் ஏற்படும். அண்டை நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளில் தலையிட்டு அவமானப்படுவதல் போன்றவை ஏற்படும்.

இலங்கைப் பிரச்சினையில் அண்டை நாடுகளின் போக்கில் மாற்றம் ஏற்படுமா?

புலிகளின் ஜாதகத்தை பொறுத்து பார்த்தால் இதுவரை எதிர்ப்பு குரல் கொடுத்து வந்தவர்கள் எல்லாம் தற்போது ஆதரவு குரல்வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை புலிகளுக்கு தனி நாடு கொடுக்கக் கூடாது என்று சொல்லி வந்தவர்கள் கூட, கொடுங்கள் என்று சொல்வார்களோ இல்லையோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதில் தவறில்லை என்று சொல்வார்கள்.

ஆஸ்த்ரியா நாட்டில் புலிகளை அங்கீகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்