இமாச்சலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது!

சனி, 22 டிசம்பர் 2007 (19:45 IST)
இமாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் கணித்துள்ளார்!

இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று கேட்டதற்கு, பிரஸ்னம் பார்த்து இவ்வாறு கூறிய வித்யாதரன், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் மற்ற கட்சிகளில் இருந்து சில உறுப்பினர்களையும், சுயேட்சைகளையும் இழுத்துக் கொண்டு பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளதெனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்